பெரிய கனவுகளுடன், சினிமாவில் தொடர்வது.. நடிகை ராஷி கண்ணா ஓபன் டாக்!
ராஷி கண்ணா
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3 & 4, அயோகியா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை நல்ல பேன் பேஸ் உள்ளது. திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஓபன் டாக்!
இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராஷி கண்ணா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "ரசிகர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகியாக சினிமாவில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    