தனுஷ் இயக்கிய ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?..லேட்டஸ்ட் தகவல்
ராயன்
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் தனுஷ்.
கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.
தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரிலீஸ் தேதி?
தற்போது ராயன் படத்தின் ஷூட்டிங் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது ஆனால் தேர்தல் நடைபெறுவதால் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
ஜூன் மாதத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால் படத்தை மீண்டும் ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
