தமிழ்நாட்டில் ராயன் படம் இதுவரை செய்துள்ள வசூல்! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ராயன்
தனுஷ் இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராயன். தனுஷ் இயக்கத்தில் முதன் முதலில் உருவாகி வெளிவந்த படம் பா. பாண்டி. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளிவந்த ராயன் படத்திற்கு சிறந்த வரவேற்பை மக்கள் தொடர்ந்து கொடுத்த வருகிறார்கள். சிலர் கலவையான விமர்சனங்களை முன் வைத்தாலும், பெரும்பான்மையான மக்கள் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டும் தான் கொடுத்து வருகிறார்கள்.
தமிழக வசூல்
இப்படியொரு சூழ்நிலையில், ராயன் உலகளவில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. உலகளவில் பட்டையை கிளப்பியுள்ள ராயன் படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.

மீண்டும் ஒரே சீரியலில் ஜோடியாக நடிக்கப்போகும் ரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா.. எந்த டிவி, தொடர் பெயர், முழு விவரம்
ராயன் படம் வெளிவந்து 7 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழக பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே ரூ. 52 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் கேரியரில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
