விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய சீரியல் நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்- இதுதான் விஷயமா?
சின்னத்திரையில் நடிக்கும் நாயகிகளுக்கு தான் மக்கள் மத்தியில் இப்போது அதிக மவுசு இருக்கிறது. ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க நாயகிகளும் நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, லைவ்வில் பேசுவது என இருக்கிறார்கள்.
அப்படி விஜய்யில் வந்த சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரச்சிதா. இவர் தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரையும் காதலித்து திருமணம் செய்தார், ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தினேஷ் கொடுத்த பேட்டி
வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்வார்கள், எங்களுடைய வாழ்க்கையில் சமீப காலமாக அசாதாரண நாட்களாக நகர்ந்து வந்தது. நான் கடந்து செல்கிறேன், அவரும் தைரியசாலி, இதில் இருந்து வெளியே வருவார்.
கணவன்-மனைவிக்குள் சண்டை வர தான் செய்யும், ஒரே வீட்டில் இருந்துகொண்டே பேசாமல் இருப்பார்கள். சிலர் கொஞ்ச நாள் தனித்தனியாக இருப்போம் என முடிவெடுப்பார்கள்.
எங்களது பிரிவு தற்காலிகமானது தான். நாங்கள் இருவரும் சட்ட பூர்வமாக பிரிய இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
வெற்றிநடைபோடும் பார்த்திபனின் இரவின் நிழல்- இதுவரை மட்டும் இவ்வளவு வசூலா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
