தினேஷ் உடன் பிரிவு, எவ்ளோ வலியை சந்தித்து இருப்பேன் தெரியுமா!! ரச்சிதா எமோஷனல் பதிவு
தினேஷ் - ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா ஒன்றாக சேர்ந்து நடித்த முதல் சீரியலிலேயே நண்பர்கள் ஆகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்ட தினேஷ் தனது மனைவியுடன் சேர விரும்புகிறேன். என்னுடைய மனைவிக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும் அதனால் அவருக்காக நான் இந்த டைட்டிலை வாங்கி பரிசளிப்பேன் என்று கூறியிருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் தினேஷ் - ரச்சிதா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுசோசியல் மீடியா பக்கங்களில் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.
எமோஷனல் பதிவு
இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எல்லாரும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டுமென்றால் எவ்ளோ வலியை சந்தித்து இருப்பேன் என்று யாரும் யோசிக்கவே இல்லை என ரச்சிதா பதிவிட்டு இருந்தார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
