இது போதும்.. ரச்சிதா இனி கணவர் உடன் சேர வாய்ப்பில்லை! முக்கிய முடிவு
சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் ரச்சிதா. அவரை மீனாட்சி என்றே நீண்ட காலத்திற்க்கு ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். அந்த அளவுக்கு சரவணன் மீனாட்சி பாப்புலர் ஆனது.
அதன் பின் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அடுத்து அவர் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்து வருகிறார்.
மேலும் அவர் பிக் பாஸ் செல்லும் முன்பே கணவர் தினேஷை பிரிந்துவிட்டார். அவரை பற்றி ஒரு வார்த்தை கூட ஷோவில் அவர் பேசவில்லை.

இது போதும்.. கணவருடன் சேர வாய்பில்லை
இந்நிலையில் தற்போது single ஆக இருக்கும் பெண்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் என்கிற நீதிமன்ற உத்தரவை பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் ரச்சிதா.
"இது போதும்" என அவர் குறிப்பிட்டு இருப்பதை பார்க்கும்போது ரச்சிதா அவர் கணவர் தினேஷ் உடன் இனி சேர வாய்ப்பு இல்லை என்பது உறுதி ஆகி இருக்கிறது.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri