உனக்கு ராதா மாதிரி பொண்ணு வேணுமா.. விடிவி கணேஷை அடித்து உதைத்த நடிகை! குக் வித் கோமாளி ப்ரோமோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி இருக்கிறது. சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர். பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷும் இதில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த வாரம் போட்டியாளர்கள் சிக்கன் வைத்து சமையல் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆக நடிகை ராதாவை அழைத்து வந்திருக்கின்றனர்.
ராதா மாதிரி பொண்ணு வேணும்..
நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ் தன்னை அம்மா திருமணம் செய்துகொள் என கூறியபோது 'ராதா மாதிரி பொண்ணு வேணும்' என கேட்டேன், ஆனால் கேரளாவில் எதோ ஒரு ஊரில் ஒரு பெண்ணை பார்த்து கட்டிவைத்துவிட்டார்கள் என கூறி இருக்கிறார்.
இதை கேட்ட ராதா விடிவி கணேஷை அடித்து உதைத்து இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நீங்களே பாருங்க.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
