சன் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு சீரியலுக்கு மாறிய நடிகை ராதிகா சரத்குமார்- எந்த டிவி?
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
கடைசியாக சன் தொலைக்காட்சியில் சித்தி 2 தொடரை தயாரித்து நடித்து இருந்தார்.
ஆனால் இடையில் திடீரென இனி நான் நடிப்பதை நிறுத்தியுள்ளேன் என அவர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
புதிய சீரியல்
சன் தொலைக்காட்சியில் காலங் காலமாக சீரியல் தயாரித்து நடித்து வந்த ராதிகா இப்போது வேறொரு டிவிக்கு சென்றுள்ளார். அவர் கலைஞர் தொலைக்காட்சியில் புதிய சீரியல் தயாரிக்க இருக்கிறாராம்.
அதில் சிறப்பு வேடத்திலும் ராதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய சீரியலுக்கு பொன்னி என்று பெயரிட்டுள்ளனர், மற்றபடி தொடர் குறித்து எந்த தகவலும் இல்லை.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?