அஜித்தின் ராஜா படத்தில் நடித்த நாயகியா இது?- பிரபல நடிகரை திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க
நடிகை பிரியங்கா திரிவேதி
தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் நடித்துவிட்டு பின் சினிமா பக்கமே வராமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அப்படி தமிழில் 2002ம் ஆண்டு வெளியான அஜித் நடித்த ராஜா என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் நடிகை பிரியங்கா திரிவேதி.
அதன்பிறகு விஜய்காந்த் நடித்த ராஜ்ஜியம், விக்ரம் நடிக்க காதல் சடுகுடு, அருண் விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி பெங்காலி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
கணவர், குழந்தைகள்
இவர் 2003ம் ஆண்டு பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆயுஷ் என மகள், மகன் உள்ளனர்.
45 வயதாகும் பிரியங்கா தனது குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்த புகைப்படம் வெளியாக அட ராஜா படத்தில் நடித்த நாயகியாக இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்