ராஜா ராணி 2ல் இருந்து ரியா விலக இது தான் காரணமா? அவரே விளக்கம்
ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா ரோலில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனை சில தினங்களுக்கு முன்பு வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக நடிகை ஆஷா கௌடா தான் தற்போது சந்தியாவாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த சீரியலில் ஹீரோயின் மாற்றப்படுவது இது மூன்றாவது முறை என்பதால் தற்போது ரசிகர்கள் புது நடிகையை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகலாம் என தெரிகிறது.
ரியா வெளியேறியது ஏன்
இந்நிலையில் ரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். தான் வெளியேறியதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என சூசகமாக கூறி இருக்கிறார்.
மேலும் மற்றொரு பதிவில் காரணம் அவருக்கே தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதனால் காரணம் சொல்லாமல் நீக்கிவிட்டார்களா? என கேள்வி எழுந்திருக்கிறது.
அதனால் விஜய் டிவிக்கும் அவருக்கும் எதோ பிரச்சனை நடந்திருக்கலாம் என தெரியவந்திருக்கிறது.
மேலும் 'திருமணம் fix ஆனதால் தான் ராஜா ராணியில் இருந்து விலகினேன் என வந்த செய்தி முற்றிலும் பொய்யானது' என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.