ராஜா ராணி 2ல் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! புது சந்தியா யார்?
ராஜா ராணி 2
விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. அதில் முதலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த தொடரில் இருந்து விலகினார். அதன் பின் ரியா விஸ்வநாதன் சந்தியா ரோலில் நடித்து வந்தார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக ரியா தான் அந்த ரோலில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் தேர்வு எழுதி ஜெயித்து, பயிற்சி முடித்து தற்போது அவரது சொந்த ஊரிலேயே போஸ்டிங்கும் வாங்கி வந்திருப்பது போல சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ரியா விலகல்
இந்நிலையில் தற்போது ரியா தான் ராஜா ராணி 2ல் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து இருக்கிறார். இனி வேறொரு நடிகை சந்தியாவாக நடிப்பார் என அவர் கூறி இருக்கிறார்.
அவர் விலகியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதுவரை தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார் அவர்.
பாய்பிரென்ட் இல்லனா என்ன.. இது தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்