முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்
ராஜா ராணி 2
விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த சீரியலில் இருந்து பல நடிகர்கள் மாற்றப்பட்டுவிட்டனர்.
தற்போது ஹீரோயின் சந்தியாவாக நடிகை ஆஷா கௌடா நடித்து வருகிறார். அவர் நடிக்க தொடங்கி சில வாரங்கள் மட்டுமே ஆகிறது.
கிளைமாக்ஸ்
தற்போது மாமியார் சிவகாமி செய்த கொலையை மருமகள் சந்தியா துப்பறிவது போன்று தான் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் சிவகாமி சிக்கிக்கொள்வாரா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விரைவில் ராஜா ராணி 2 முடியப்போகிறது என்றும் வரும் ஏப்ரல் 21ம் தேதி கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்திருக்கிறது.
ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் சந்தானம் பட ஹீரோயின்! என்ன ஆனது?