ராஜா ராணி 2 மொத்த குடும்பமும் ஷாக்! அப்படினா அவர் அவுட்டா..
ராஜா ராணி 2ல் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ராஜா ராணி 2
விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் தற்போது ஹீரோவின் தம்பி திருமணம் பற்றிய பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெசி என்ற பெண்ணை கர்பமாக்கிவிட்டு ஏமாற்ற முயன்ற ஆதி வசமாக குடும்பத்திடம் மாட்டிக்கொண்டார்.
அதே நேரத்தில் வேற்று மத பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்வதிலும் சிவகாமிக்கு தயக்கம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹீரோவின் அப்பாவுக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்க அனைவரும் பதறியடித்து ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள்.
அப்போது அவருக்கு ஒரு குறிப்பிட்ட வகை ரத்தம் தேவை என டாக்டர் கேட்க, ஜெசி அந்த வகை ரத்தம் தான் என கூறி வரவைக்கிறார்.
இவர் காலியா?
ரத்தம் தேவை என்றால் அதில் மதம் குறுக்கில் வரவில்லை, ஆனால் மருமகளாக ஏற்றுக்கொள்ள மட்டும் மதம் தடையாக இருக்கிறதா என சந்தியா கேட்பதும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த காட்சிகளில் ஹாஸ்பிடலில் அடிபட்டு படுத்திருக்கும் நடிகர் சைவம் ரவி 'அப்போ நான் காலியா' என வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாவில் பேசி இருக்கிறார்.
அனைவரும் எதிர்பார்த்த சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்! வெளியான அதிரடி அப்டேட்