அனைவரும் எதிர்பார்த்த சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்! வெளியான அதிரடி அப்டேட்
சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கடைசியாக விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்தியளவில் ட்ரெண்டானது. அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மோஷன் போஸ்டர்
ஆனால் திடீரென அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டு, சூர்யாவின் 42-வது திரைப்படம் தொடங்கப்பட்டது. மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
இதற்கிடையே தற்போது அப்படத்தில் இருந்து அனைவரும் எதிர்பார்த்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆம், நாளை 10 மணிக்கு சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் திரைவிமர்சனம்