ராஜா ராணி 2 சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படம்- எப்படி முடித்துள்ளார்கள் பாருங்க
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள்.
தொடர் ஆரம்பித்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது ஆல்யா தொடரில் இருந்து விலகினார், அவருக்கு பிறகு ரியா என்பவர் நடித்து வந்தார்.
ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டார், இப்போது புதிய நடிகை நடிக்கிறார்.
அவரை தாண்டி சீரியலிலும் பலர் மாற்றப்பட்டுள்ளனர், ஏன் இயக்குனரே மாற்றப்பட்டார்.
கடைசி நாள் படப்பிடிப்பு
கடந்த சில நாட்களாகவே இந்த ராஜா ராணி 2 சீரியல் முடியப்போகிறது என்று தகவல்கள் வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் போட்டோ வெளியாகியுள்ளது.
அதில் குடும்பத்தினர் அனைவரும் நிற்க சந்தியா கர்ப்பமாக இருப்பதாக காட்டுகின்றனர்.
புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்