'ராஜா ராணி 2' தொடரில் தற்போது ஆல்யாவுக்கு பதிலாக நடிக்கும் ரியா, யார் தெரியுமா?
ராஜா ராணி 2
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ராஜா ராணி 2, முதல் பாகத்தை போலவே வரவேற்பை பெற்றுள்ள ராஜா ராணி 2 தொடருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இந்த தொடரின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார் ஆல்யா மானசா, அவர் தற்போது கற்பகமாக இருப்பதால் தற்காலிகமாக ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் என்பவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அல்யாவுக்கு பதிலாக நடிக்கும் ரியா
சென்னையை மாடலான ரியா விஸ்வநாதன் இதே விஜய் டிவி-ல் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் ரியா என தெரியவந்துள்ளது.
ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகியது, தற்காலிகம்தான், கண்டிப்பாக அவர் மீண்டும் தொடரில் இணைவார் என்கிறார்கள். அவர் வரும் வரையில் அவருக்கு பதிலாக ரியா இனி சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார்.
ஒரே நாளில் அஜித் - விஜய் படங்களின் அப்டேட் ! யாரும் எதிர்பார்த்திராத தகவல்..