ஒரே நாளில் அஜித் - விஜய் படங்களின் அப்டேட் ! யாரும் எதிர்பார்த்திராத தகவல்..
தமிழ் சினிமவின் உச்ச நட்சத்திரங்கள்
விஜய் - அஜித் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருக்கும் இரண்டு உச்ச நட்சத்திரங்கள், இவர்களின் புகழ் சாதனைகள் குறித்து யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்த வருடம் ரசிகர்கள் செம கொண்டாட்டம் தான், ஏனென்றால் விஜய் - அஜித் இருவரின் திரைப்படங்களும் இந்தாண்டு வெளியாகிறது.
அதன்படி அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்ததை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகவுள்ளது.
ஒரே நாளில் இரண்டு அப்டேட்ஸ்
இதனிடையே வலிமை படத்தை தொடர்ந்து AK 61 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார், அப்படம் தொடங்கும் முன்பே நேற்று AK62 படத்தின் அப்டேட் வரத்தொடங்கின.
அதன்படி லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறதாம்.
இதற்கிடையே விஜய் பீஸ்ட் பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருந்த நிலையில் நாளை அப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதாம். ஒரே நாளில் அஜித் - விஜய் பட அப்டேட்ஸ் வருவதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
S.S.ராஜமௌலியுடன் முதன்முறையாக கைகோர்க்கும் பிளாக் பஸ்டர் கதாநாயகன் !