ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிறாரா?- என்ன படம்?
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் நேரடி தமிழ் சீரியல்களும் உள்ளது, வேறொரு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படும் தொடர்களும் உள்ளது.
அப்படி ஹிந்தியில் நல்ல ஹிட்டடித்த தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது ராஜா ராணி 2 தொடர். பிரவீன் பென்னட் இயக்கும் இந்த தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் தான் தயாரிக்கிறார்கள்.
சித்து மற்றும் ஆல்யா மானசா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த தொடரில் நாயகி மாற்றம் மட்டும் அண்மையில் நடந்தது. ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா நடித்து வருகிறார்.
சித்துவின் புதிய வாய்ப்பு
கல்யாணம் மற்றும் ராஜா ராணி 2 தொடர்கள் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சித்து. இவர் சீரியல் நடிகை ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு இப்போது சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
தற்போது சித்து குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றனவாம். விரைவில் அவர் ஹீரோவாக வெள்ளித்திரையில் கலக்க வரப்போகிறார் என்கின்றனர்.
80களின் கனவு நாயகன் நடிகர் மைக் மோகனின் சில நிஜ உண்மைகள்- ஓர் பார்வை