வெள்ளித்திரை நடிகையாக மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை.. யாருடன் நடிக்கிறார் தெரியுமா
ராஜா ராணி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. இதில் வில்லியாக நடித்து கொண்டிருந்தவர் விஜே அர்ச்சனா.
முதலில் விஜே-வாக இருந்த இவர், பின் ராஜா ராணி 2 சீரியல் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.
இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற அர்ச்சனா திடீரென சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் சற்று அப்செட் ஆனார்கள்.
வெள்ளித்திரையில் அர்ச்சனா
இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் பிரபல நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை அர்ச்சனா.
படங்களில் நடிக்க தான் சீரியலில் இருந்து வெளியேறியதாகவும், இப்படத்தில் அருள்நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விஜே அர்ச்சனா கூறியுள்ளார்.
பிரபல முன்னணி நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா