ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யாவிற்கு பதிலாக நடிக்கும் புதிய சந்தியா- அழகிய புரொமோ
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பான தியா அவுர் பாதி ஹம் தொடரின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
சீரியலில் மாற்றம்
இந்த தொடர் ஆரம்பிக்கும் போது நடிகை ஆல்யா மானசா குழந்தை பெற்று உடல் எடை குறைத்து நடிக்க வந்தார். பின் சில மாதங்களில் அவர் மீண்டும் கர்ப்பமானார்.
இதனால் தொடரில் இருந்து விலகிவிடுவார் என நினைத்தால் குழந்தை பிறக்கப்போகும் இந்த மாத ஆரம்பம் வரை நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பதை நிறுத்த அவருக்கு பதிலாக இனி சந்தியாவாக ரியா என்ற நடிகை புதியதாக நடிக்க வந்துள்ளார்.
இவர் எப்படி நடிப்பார் என்பதையெல்லாம் இனி தான் பார்க்க வேண்டும்.
புதிய புரொமோ
புதிய சந்தியாவை வரவேற்கும் விதமாக ராஜா ராணி 2 தொடரின் புதிய புரொமோ வந்துள்ளது. அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகிறது.
மனைவி, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் புகழ் அபிநய்- கலக்கல் புகைப்படங்கள்