ரஜினி, கமலை மிஞ்சும் நடிகர் இவர் தான்.. பிரபல இயக்குனர் பேச்சு
முன்னணி நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் வைட் காலம் முதல் இன்று வரை ஜொலித்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ரஜினி,கமல்.
திரைத்துறையில் இன்றும் கொடி கட்டி பறக்கும் இவர்களை தொடர்ந்து முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் அஜித், விஜய்.
இந்நிலையில் நடிகை தேவயானியின் கணவரும், பிரபல இயக்குனருமான ராஜகுமாரன், முன்னணி நடிகர்களாக வலம் வரும் இவர்களின் நடிப்பை பற்றி விமர்சித்துள்ளார்.
இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது,
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி,கமல், விஜய், அஜித்தை விட சிறந்த நடிகர் சரத்குமார் தான்.அதற்கு எடுத்துக்காட்டாக "வாரிசு" படத்தில் விஜய் பெரிதாக நடிக்கவில்லை. விஜய் தனது தந்தையிடம் திமிராக நடந்து கொண்டு இருப்பார்.
அவ்வாறு இருந்தால் அவரின் ரசிகர்கள் அதே தான் பின்பற்றுவார்கள். படம் என்று வந்துவிட்டால் அதில் நல்லதை தான் சொல்ல வேண்டும். ஆனால் சரத்குமார் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். மேலும், சரத்குமார் தனக்கென தனி ஸ்டைல் கையாள்வார். இவரை எந்த நடிகருடனும் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார்.
இளையராஜாவிற்காக தனது வாழ்க்கையின் முக்கிய விஷயத்தை தியாகம் செய்த சின்னக்குயில் சித்ரா..