சர்ச்சையில் சிக்கிய ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.. பாடகி ராஜலக்ஷ்மியின் அதிரடி முடிவு
அதிதி ஷங்கர்
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை வெளியாகிறது.
இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் பாடலை அதிதி ஷங்கர் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இப்பாடலை முதன் முதலில் பாடியது பின்னணி பாடகி ராஜலக்ஷ்மி தானாம்.
ஆனால், அதன்பின் அவர் பாடியதை எடுத்துவிட்டு, அதிதி ஷங்கரை பாடவைத்துள்ளனர். இந்த செய்தி வெளிவந்த பிறகு அதிதி ஷங்கரின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், இந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாடகி ராஜலக்ஷ்மி. ஆம், அதிதி ஷங்கர் பாடியது குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
" மதுர வீரன் பாடலை நான் பாடியது உண்மை தான். அதிதி நல்ல பாடுறாங்க. அதனால பாட வெச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதாக நினைத்துக்கொண்டு அதிதியை விமர்சனம் செய்ய வேண்டாம். அதிதியை விமர்சனம் செய்வது வருத்தமா இருக்கு " என்று கூறியுள்ளார்.

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
