ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ! விருமன் பட சர்ச்சை
விருமன்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.
விருமன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனால் படத்தை காண ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே இப்படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் தனது முதல் திரைப்படத்திலே யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் அதிதி ஷங்கர்.

நீக்கப்பட்ட குரல்
மதுரை வீரன் என தொடங்கும் அந்த பாடல் அதிதி ஷங்கர் மற்றும் யுவன் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் இப்பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி தானாம்.
அவர் தான் இப்பாடலை முதலில் பாடியுள்ளார், ஆனால் திடீரென அவரின் குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாட வைத்தாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி பெரிய ஏமாற்றத்திற்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் முதல்முறையாக நடித்த காட்சி
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri