மாஸ்டர், வலிமை வசூலை ஒரே நாளில் முந்திய ஆர்ஆர்ஆர்! ஒவ்வொரு ஏரியா வசூல் விவரம் இதோ
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளியான ஆர்ஆர்ஆர் படத்திற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு அவர் இயக்கும் பிரம்மாண்ட படம் இது என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்றாலும், தற்போது படம் அதை பூர்த்தி செய்து இருக்கிறது.
நல்ல ரெஸ்பான்ஸ்
RRR பார்த்த ரசிகர்கள் அதிக பற்றி வியந்து சமூக வலைத்தளங்களால் பேசி வருகின்றனர். எல்லா படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன் கூட இந்த படத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து பேசி இருக்கிறார். அந்த அளவுக்கு RRR நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
பிரம்மாண்ட வசூல்
படம் முதல் நாளில் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டி சாதனை படைத்து இருக்கிறது. முதல் நாளிலேயே மாஸ்டர், வலிமை என அனைத்து சமீபத்திய படங்களின் சாதனைகளை தகர்த்து இருக்கிறது ஆர்ஆர்ஆர்.
தற்போது ஏரியா வாரியாக RRR படம் வசூலித்த தொகை பற்றி பார்க்கலாம். வந்திருக்கும் தகவல்களின் படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 120.19 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்து உள்ளது இந்த படம்.
- ஆந்திரா + தெலுங்கானா - 120.19 கோடி ரூ.
- கர்நாடகா - 16.48 கோடி ரூ.
- தமிழ்நாடு - 12.73 கோடி ரூ.
- கேரளா - 4.36 கோடி ரூ.
- இந்தியாவின் இதர மாநிலங்கள் - 25.14 கோடி ரூ.
- வெளிநாடு - 78.25 கோடி ரூபாய்.
மொத்தமாக முதல் நாள் வசூல்: ₹ 257.15 கோடி .
இந்த பிரம்மாண்ட சாதனையை தெலுங்கு சினிமா ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசிய தனுஷ் பட நடிகருக்கு வலுக்கும் எதிர்ப்பு