RRR ஆஸ்காருக்கு இத்தனை கோடி மட்டுமே செலவு செய்தோம்: ராஜமௌலி தரப்பு விளக்கம்
RRR
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்து இருந்த RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றது. இது இந்தியாவுக்கே கிடைத்த பெருமை என அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்தார்கள்.
அதே நேரத்தில் ஆஸ்கார் விருது வெல்வதற்காக ராஜமௌலி பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார் என விமர்சனமும் இன்னொரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. 83 கோடி ருபாய் அளவுக்கு RRR குழுவினர் செலவு செய்திருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு தான் செலவு செய்தோம்
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயன் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் ஆஸ்காருக்கு செலவு செய்த தொகை பற்றி பேசி இருக்கிறார்.
ஆஸ்காரை பணம் கொடுத்து வாங்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விருதுக்காக RRR படத்தை பரப்புரை செய்வதற்கு மட்டும் தான் ரூ 8.5 கோடி செலவு செய்திருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா? விளக்கம் கொடுத்த பெற்றோர்
அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் முகத்தில் துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞர் மீது வழக்கு பதிவு News Lankasri
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri