500 கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி.. அதுவும் இவருக்காக தான்
கல்கி AD 2898
இந்தியளவில் தற்போது ரூ. 500 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட வரும் பிரம்மாண்ட திரைப்படம் கல்கி AD 2898. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
பிரபாஸ் ஹீரோவாக நடிக்க உலக நாயகன் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.
சமீபத்தில் கூட அமிதாப் பச்சன் கதாபாத்திரம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
கேமியோ ரோல்
இந்த நிலையில், கல்கி AD 2898 திரைப்படத்தில் கேமியோ ரோலில் இயக்குனர் ராஜமௌலி நடிக்கவுள்ளாராம். பல இயக்குனர்கள் இதற்குமுன் இவரை நடிப்பதற்காக அழைத்தும் போகாத ராஜமௌலி, பிரபாஸ் இப்படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டவுடன் ஓகே என சொல்லிவிட்டாராம்.
ஏனென்றால் பிரபாஸை தனது மாணவனாகவே நினைக்க துவங்கிவிட்டாராம் ராஜமௌலி. அதனால் தான் பிரபாஸ் இப்படியொரு விஷயத்தை கேட்டவுடன் நோ சொல்லாமல் சரி என கூறி கல்கி AD 2898 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ராஜமௌலி ஒப்புக்கொண்டுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
