நடிகர் ராஜசேகர், ஜீவிதா ஜோடிக்கு 1 வருடம் சிறை! நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
நட்சத்திர ஜோடியான நடிகை ஜீவிதா மற்றும் ராஜசேகர் ஜோடி தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர்.
நடிகர் ராஜசேகர் மற்றும் சிரஞ்சீவி இடையே கடந்த 2003 முதல் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. 2011ல் சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கி பற்றி ராஜசேகர் ஒரு கருத்தை கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
ரத்த வங்கிக்கு நன்கொடையாக வரும் ரத்தத்தை சிரஞ்சீவி பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார் என ராஜசேகர் குற்றம்சாட்டினார்.
சிறை தண்டனை
ராஜசேகர் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக இப்படி ஒரு கருத்தை கூறியதற்கு சிரஞ்சீவியின் உறவினர் அல்லு அரவிந்த் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. ராஜசேகர் மற்றும் ஜீவிதா ஜோடிக்கு 1 வருடம் சிறை மற்றும் 5 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளித்து ஜாமீனும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
மாணவி செய்த செயலால் சட்டென கோபம் அடைந்த லோகேஷ் கனகராஜ்.. என்ன நடந்தது தெரியுமா?