ரஜினிக்கான கதையை உருவாக்கி வரும் டான் பட இயக்குநர்! தலைவர் 170 பட கூட்டணியின் பின்னணி
சூப்பர் ஸ்டார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தை தொடர்ந்து ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் பரவின.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரூ. 100 கோடி அளவில் வசூலித்து சாதனை படைத்தது. அப்படத்தை பார்த்து ரஜினியும் பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
உருவாகும் ரஜினி 170
இதனிடையே ரஜினி - சிபி கூட்டணி இணைய தயாரிப்பு நிறுவனம் லைக்கா தான் காரணம் என சொல்லப்படுகிறது. கடைசியாக ரஜினியின் தர்பார் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. ஆனால் அப்படம் சரியாக போகவில்லை என்பதால் ரஜினி மீண்டும் ஒரு படத்தை செய்து கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
டான் திரைப்படத்தின் மூலம் பெரிய வெற்றி கண்டுள்ள லைக்கா நிறுவனம் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் பெயரை ரஜினியிடம் பரிந்துரைத்தாகவும் அதற்கு ரஜினி தரப்பில் இருந்து டபுள் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கதையை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, தீபாவளியில் இது குறித்து அறிவிப்பு வரும் எனவும் சொல்லப்படுகிறது.
முன்னணி ஹீரோ படத்தை நிராகரித்த சமந்தா! இதுதான் காரணம்