ஒரே நாளில் நடந்த இரண்டு திரைப்படங்களுக்கான ஒப்பந்தம்! அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் ரஜினி
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அப்டேட் இணையத்தில் பரவ தொடங்கின.

அதன்படி லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடிப்பதாக சொல்லப்பட்டது. இதற்கிடையே இன்று ரஜினி வீட்டில் அந்த இரண்டு திரைப்படங்களுக்கான ஒப்பந்தம் நடைபெற்று இருக்கிறது.
ரஜினியின் வீட்டிற்கு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரணும் சென்று இருக்கிறார். ஒரு திரைப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாகவும், மற்றொரு திரைப்படத்தை இயக்குநர் மிகவும் அச்சரியப்படும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்! அதிகாரபூர்வமாக மோதலை அறிவித்த தயாரிப்பாளார்