சம்பளமே இல்லாமல் ரஜினி நடித்த திரைப்படம், அதுவும் தமிழில் கிடையாதா !

Rajinikanth rajini thalaivar 169 bengali
By Jeeva Mar 18, 2022 04:30 PM GMT
Report

ரஜினியின் 169 திரைப்படம்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அப்படம் வசூல் படைக்க தவறியது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தது.

  சம்பளமே இல்லாமல் ரஜினி நடித்த திரைப்படம், அதுவும் தமிழில் கிடையாதா ! | Rajini Acted In This Movie Without Salary

சம்பளமே இல்லாமல் ரஜினி நடித்த படம்  

இயக்குனர் நெல்சன் தற்போது பீஸ்ட் படத்தை முடித்துள்ள நிலையில் அப்படத்தின் வேலைகள் முடிந்த பின் ரஜினி 169 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரஜினி குறித்த எந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியானாலும் ரசிகர்களிடையே பேசப்படும். அந்த வகையில் ரஜினி பெரிய ஸ்டாராக இருக்கும் போதே சம்பளம் பெறாமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், 1997 ஆம் ஆண்டு வெளியான Bhagya Debata என்ற பெங்காலி படத்தில் ரஜினி ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக அப்படத்தின் இயக்குனர் ரகுராம் கூறியுள்ளார். அப்படத்தின் கதை கேட்டு ரஜினி விரும்பியதாலே ரஜினி இந்த முடிவை எடுத்தாராம்.

சம்பளமே இல்லாமல் ரஜினி நடித்த திரைப்படம், அதுவும் தமிழில் கிடையாதா ! | Rajini Acted In This Movie Without Salary

ஹோலி பண்டிகை ரஜினிக்கு ஏன் ஸ்பெஷல் என தெரியுமா? அவரே சொன்ன விஷயம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US