ஹோலி பண்டிகை ரஜினிக்கு ஏன் ஸ்பெஷல் என தெரியுமா? அவரே சொன்ன விஷயம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.
இவரின் திரைப்படங்கள் குறித்து அவற்றின் சாதனைகள் புதிதாக சொல்லி தெரியவேண்டியதில்லை.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தது.
பெயரை மாற்றிய ரஜினி
இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் ரஜினியின் ரசிகர்கள் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவலை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
அதன்படி இந்த ஹோலி பண்டிகையில் தான் சிவாஜி ராவ் என்ற அவரின் பெயரை ரஜினிகாந்த் என பாலசந்தர் மாற்றி வைத்துள்ளார். இது குறித்து அவர்கள் இருவரும் அளித்த பழைய பேட்டி ஒன்றில் பாலசந்தர் நான் எப்போது உன் பெயரை மாற்றினேன் என கேட்டதற்கு ரஜினி ஹோலி பண்டிகையின் போது என கூறியிருப்பார்.
வனிதா, ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் இரவு பார்ட்டி !