அஜித் ரசிகர் உயிரிழப்பிற்கு உதவி செய்த பிரபல நடிகரின் ரசிகர் மன்றம்.. இந்த மனசு தான் கடவுள்!

By Dhiviyarajan Feb 13, 2023 07:50 AM GMT
Report

தமிழ் திரைத்துறையில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியானது.

இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பரத் குமார் என்ற அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீது ஏறி நடனமாடும் போது கால் தடுக்கி கீழே விழுந்தார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அஜித் ரசிகர் உயிரிழப்பிற்கு உதவி செய்த பிரபல நடிகரின் ரசிகர் மன்றம்.. இந்த மனசு தான் கடவுள்! | Rajini Fans Helped Ajith Fan Who Died In Thunivu

ரசிகர் மன்றம் உதவி

இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் உயிரிழந்த பரத்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினர்.

செய்தியாளருக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் மன்ற நிர்வாகி, "பரத்குமாரின் உயிரிழப்பு எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை ரஜினி ரசிகர் மன்ற சார்பில் செய்து தரப்படும்" என்று கூறினார்.  

அஜித் ரசிகர் உயிரிழப்பிற்கு உதவி செய்த பிரபல நடிகரின் ரசிகர் மன்றம்.. இந்த மனசு தான் கடவுள்! | Rajini Fans Helped Ajith Fan Who Died In Thunivu

நடிகர் தனுஷின் பள்ளிபருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- முதன் முறையாக இதோ பாருங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US