விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் விஷயத்தை முதலில் அறிமுகம் செய்து வைத்ததே ரஜினி தான் !

By Jeeva Jun 02, 2022 07:20 AM GMT
Report

ரஜினி ரசிகர்கள் அறிமுகம் செய்த விஷயம் 

விஜய், அஜித் என தற்போது டாப் நடிகர்களாக உள்ள நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் இவர்களின் ரசிகர்களுக்கிடையே பெரிய சண்டை உருவாகும் விஷயம் என்றால் அது அவர்களின் திரைப்படங்களின் காலெக்ஷன் மட்டுமே.

அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எப்போதும் முதல் நாளில் அதிகாலை ஷோஸ்களில் இருந்தே ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி ரசிகர்கள் மட்டுமே முந்திக்கொண்டு பார்க்கும் அந்த FDFS ஷோஸ்களை அறிமுகப்படுத்தியதே ரஜினி ரசிகர்கள் தானாம்.

ஆம், 1980-ஆம் ஆண்டு ஜூலை ரஜினியின் காளி திரைப்படம் திருச்சி சென்ட்ரல் திரையரங்கில் வெளியானது. அந்த திரையரங்க நிர்வாகியிடம் பேசி, காளி வெளியாகும் தினத்தில் திரையரங்கை குத்தகைக்கு எடுத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு ரசிகர்களே டிக்கெட் விநியோகம் செய்து ரஜினி படத்தை முதலில் அவரின் ரசிகர்களே பார்க்கும் படி ரசிகர்கள் மன்ற காட்சியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தனர் திருச்சி ரஜினி ரசிகர்கள். 

விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் விஷயத்தை முதலில் அறிமுகம் செய்து வைத்ததே ரஜினி தான் ! | Rajini Fans Introduced This First

விக்ரம் படம் குறித்து உதயநிதி அளித்த விமர்சனம் ! அதற்கு உலகநாயகன் சொன்ன பதில்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US