விக்ரம் படம் குறித்து உதயநிதி அளித்த விமர்சனம் ! அதற்கு உலகநாயகன் சொன்ன பதில்..
உதயநிதிக்கு கமல் சொன்ன பதில்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகின்றனர்.
நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் முன்பதிவு சூடுபிடித்துள்ளது, மேலும் அதை வைத்து பார்க்கையில் முதல் காலெக்ஷன் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடவுள்ள உதயநிதி ஸ்டாலின் விக்ரம் குறித்த முதல் விமர்சனத்தை அளித்து இருக்கிறார்.
அதன்படி விக்ரம் சூப்பர் என்றும், படம் பிளாக் பஸ்டர் வெற்றியடையும் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கமல் "உதயநிதி தம்பி, விக்ரம் குறித்த உங்கள் முதல் பார்வைக்கு நன்றி, நீங்கள் எனது ரசிகர் என அறிவித்துள்ளீர்கள்.
உங்களின் பதிவு எனது மற்ற சகோதரர்களையும் உற்சாகப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார் கமல்.
Dear @Udhaystalin thambi. Thanks for your glowing first view report on #Vikram . You had proclaimed yourself as a fan. Your report will enthuse all my other brothers to dizzying heights. @RKFI @turmericmediaTM #VikramHitlist https://t.co/IbeclwXCu8
— Kamal Haasan (@ikamalhaasan) June 1, 2022

நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு- நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு, என்ன தெரியுமா?