ரஜினி - கமல் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? ரஹ்மான், அனிருத் இல்லை...
தலைவர் 173
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் எப்போது இணைவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.

இப்படத்தை சுந்தர் சி இயக்கப்போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளிவந்த சில நாட்களிலேயே படத்திலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இதையடுத்து தலைவர் 173 படத்தின் புதிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. வருகிற டிசம்பர் 12ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர். மேலும் சாய் பல்லவி இப்படத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர்
இந்த நிலையில், தலைவர் 173 படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அல்லது கமல் படங்கள் என்றால் சமீபகாலமாக பெரும்பாலும் ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிருத்தான் இசையமைத்து வருகிறார்கள்.

ஆனால், இப்படத்திற்கு இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.