சூப்பர் ஸ்டாரின் ரிஷிகேஷ் பயணத்தில் யாராலும் சந்திக்க முடியாத நபரை சந்தித்த ரஜினி!
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் அவரின் ரசிகர்களிடையே இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அப்படி அவரின் ரிஷிகேஷ் பயணத்தில் நடந்த ஒரு விஷயம் தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

ரிஷிகேஷ் பயணம்
ஆம், ரஜினி ஒருமுறை ரிஷிகேஷ் சென்றபோது அங்கு தான் சந்தித்த ரிஷி ஒருவர் குறித்து பேசியிருக்கிறார். அவர் சந்தித்த ஒரு ரிஷியை யாராலும் அவ்வளவு எளிதாக பார்த்திட முடியதாம். ஒரு குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை எப்படியோ தேடி கண்டு பிடித்திருக்கிறார் ரஜினி.
வாசல் முழுக்க நிறைய சிஷியர்கள் இருக்க, அவருக்கு எப்படியோ அனுமதி கிடைத்திருக்கிறது. எண்பது வயதக்கும் அதிமான வயதுடைய அந்த ரிஷியயை பார்க்கவே ஆஜானுபாகுவாக இருந்ததாக ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி வா என்று சைகையில் கூப்பிட்டு அவரிடம் இருந்த வெற்றிலையை ரஜினியிடம் கொடுத்துவிட்டு சில வினாடிகள் மௌனம் இருந்தாராம், பின்னர் மறுபடி ‘போ!’ன்னு ஒரு சைகையில் சொன்னதும் ரஜினி திரும்ப வந்துவிட்டாராம்.




நீயா நானா கோபிநாத்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா