ரஜினிகாந்திற்கு ஜோடியாக 54 வயது நடிகை.. யார் தெரியுமா! தலைவர் 171 அப்டேட்
தலைவர் 171
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு தலைவர் 171ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி இப்படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது.
லோகேஷ் பாணியில் கண்டிப்பாக இது மாஸான டீசராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாம்.
ரஜினியின் ஜோடி
இந்த நிலையில், தலைவர் 171ல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஷோபனா தான் ரஜினியின் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
ஏற்கனவே இருவரும் தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளனர். ஆனால், இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.