15 வருடங்களுக்கு முன் வெளியான சிவாஜி படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டாரின் சம்பளம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைபயணத்தில் மைல்கலை தொட்ட திரைப்படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் திரைப்படமாக இருப்பது சிவாஜி.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினி நடித்த இப்படம் தமிழ் சினிமாவில் அதுவரை வெளியான திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளை முறியடித்து No.1 திரைப்படமாக அமைந்தது.
அப்படியான சிறப்பினை பெற்ற அப்படம் வெளியாகி சமீபத்தில் தான் 15 வருடங்கள் ஆனது, இதனை கொண்டாடும் வகையில் இயக்குநர் ஷங்கர் ரஜினியை நேரிலே சென்று சந்தித்தி இருந்தார்.
தமிழ் சினிமாவின் சிறந்த கமர்சியல் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் சிவாஜி திரைப்படத்திற்காக நடிகர் ரஜினி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினி அப்படத்திற்காக ரூ.18 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம். அதுமட்டுமின்றி அவர் அந்த சம்பளத்திற்காக அட்வான்ஸாக வாங்கியது ரூ.1000 மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 திரைப்படத்தை இயக்கும் முன் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள முடிவு ! குவியும் பாராட்டுக்கள்..
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu