சம்பளத்தை மொத்தமாக குறைத்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! தலைவர் 170 படத்திற்கு இவ்வளவு தானா?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களின் மூலம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவரின் திரைப்படங்கள் சமீப காலமாக பெரிய வசூல் சாதனைகளை செய்ய தவறி வருகிறது. அப்படி கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலரை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தலைவர் 170
இந்நிலையில் தற்போது அப்படத்தை ரஜினி நடிக்கவுள்ள அவரின் 170-வது திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஏற்கனவே அப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி தற்போது அப்படத்திற்காக ரஜினி ரூ. 75 கோடி மட்டும் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினி ரூ. 80 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதைவிட குறைவாக ரஜினி அடுத்த படத்திற்காக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா