LCU-வில் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாராக இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்..

By Jeeva Jun 09, 2022 02:00 PM GMT
Report

LCU-வில் ரஜினி  

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த விக்ரம் திரைப்படம் அனைவரிடமும் மிக பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படத்தின் பெரிய வரவேற்பை தொடர்ந்து உலகநாயகன் கமல் இயக்குனர், உதவி இயக்குனர்கள், சூர்யா உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது, இதில் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய விஷயங்கள் ரசிகர்களை குஷியாகி இருக்கிறது.

ஆம், அப்படி கமல் ஒரு விஷயம் "நான் எப்போதும் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயார், அது லோகேஷ் படத்தில் நடக்குமா என்பதை லோகேஷும், ரஜினியும் தான் முடிவு செய்யவேண்டும்" என பேசியுள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் தனது LCU-யை விரிவு செய்யவுள்ளதாக சொல்லியுள்ளார். அதில் கமல், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து ரஜினி இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.   

LCU-வில் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாராக இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்.. | Rajini To Join In Lcu

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US