முதலமைச்சருடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினி! ஏர்போர்ட்டில் கூறிய சூப்பர்ஸ்டார்
ஜெயிலர்
ஜெயிலர் படம் தற்போது பாக்ஸ்ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் 375 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
படம் ரிலீஸ் நேரத்தில் ரஜினி இமயமலைக்கு ஆன்மிக பயணமாக சென்று இருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது. மேலும் ரஜினி ஜார்கண்ட் மாநில கவர்னரை நேரில் சந்தித்து இருந்தார்.
முதலமைச்சர் உடன் ஜெயிலர்
இந்நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ரஜினி நாளை ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறார்.
ரஜினி இன்று லக்னோ வந்தடைந்த நிலையில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்கள் கேள்விக்கு இந்த விஷயத்தை ரஜினி தெரிவித்து இருக்கிறார்.
மாநகரம் நடிகர் ஸ்ரீ மலையாள நடிகையுடன் திருமணமா? வைரலாகும் போட்டோ