தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ.. சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்
ரஜினிகாந்த்
1970களில் ரஜினி சினிமாவிற்குள் என்ட்ரி கொடுப்பதற்கு முன் சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்கள் அனைவரும் நான் எம்.ஜி.ஆர் போல் ஆகவேண்டும், சிவாஜி போல் ஆகவேண்டும் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால், 1975ல் எப்போது ரஜினிகாந்த் என்ட்ரி கொடுத்தாரோ, அதன்பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஒவ்வொரு ஹீரோவும் ரஜினி போல் ஆக வேண்டும், அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான் என போட்டிபோட்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தை இன்று வரை வேறு யாராலும் பிடிக்க முடியவில்லை.
சூப்பர்ஸ்டார்
சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டும் தான் நடிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தை உடைத்து எறிந்தார். பின் தனக்கென்று தனி ஸ்டைலான நடிப்பை உருவாக்கினார். இவர் செய்த ஸ்டைலை தான் தற்போது வரை பல நடிகர்கள் தங்களுடைய படங்களில் செய்து வருகிறார்கள்.
40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் உச்ச நட்சத்திரம், 11 இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள், ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த இரண்டு திரைப்படங்கள் என சினிமாவில் இவர் செய்த சாதனை ஏறலாம். இப்படிப்பட்ட மாபெரும் கலைஞன், இந்திய சினிமாவில் ரியல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73வது பிறந்தநாளுக்கு சினிஉலகம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
அன்றும் இன்றும் என்றும் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
