கொடிய விஷ பாம்புடன் நடித்த ரஜினிகாந்த்.. உண்மையை கூறிய இயக்குனர்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அண்ணாமலை.
பாம்புடன் நடித்த ரஜினிகாந்த்
இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் பாம்புடன் நடித்திருப்பார் ரஜினிகாந்த். அந்த காட்சி செம அருமையான நகைச்சுவை காட்சியாக அமைத்திருக்கும்.

விஷம் இல்லாத பாம்புடன் தான் ரஜினி நடித்தார் என்று ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அது உண்மை இல்லையாம். அன்று படப்பிடிப்பு நடந்தபோது கொண்டு வந்த பாம்பு விஷம் எடுக்காத பாம்பாம்.

இது அன்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு தெரியாதாம். படப்பிடிப்பு முடிந்த பின் தான் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு தெரியவந்ததாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நல்ல வேலை அன்று எதுவும் அசம்பாவிதம் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஹீரோவாகும் சூரி.. மலையாள நடிகையுடன் புதிய கூட்டணி, வெளிவந்த புகைப்படம்