அருணாச்சலம் படத்தின் BTS வீடியோ.. இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத ஒன்று..
அருணாச்சலம்
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1997ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அருணாச்சலம்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்பா, ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், ரகுவரன், வி.கே. ராமசாமி, நிழல்கள் ரவி, செந்தில், ஜனகராஜ் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். தேனிசை தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
BTS வீடியோ
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்தது. இந்த நிலையில், அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட BTS வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் பார்த்திராத அருணாச்சலம் படத்தின் BTS வீடியோ இதோ..
நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார பூக்கி 🎀 மோட்ல பாத்துருக்கிங்களா 😍😍😍 pic.twitter.com/wynhZG8HNe
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) August 31, 2025
ரஜினியின் அடுத்த படங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ரஜினி நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
