ரஜினி குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோ.. யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் அவர். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் தான் அவரது கடைசி படம் என கூறப்படுகிறது.
ரஜினியின் இரண்டு மகள்களும் இயக்குனர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் அவரது மனைவியும் பாடகி தான்.
இன்னொரு நடிகர்..
இப்படி ரஜினிகாந்தின் மொத்த குடும்பமும் சினிமாவை சேர்ந்தவர்கள் தான். இந்த நிலையில் தற்போது ரஜினி குடும்பத்திலிருந்து இன்னொரு நபர் நடிகராக வந்திருக்கிறார். ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் தான் அது.
அவர் தற்போது ஒரு படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். அந்த படத்தின் சூட்டிங் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் தொடங்கி இருக்கிறது.
மீண்டும் ஹீரோயின் ஆகும் மீனா? யாருக்கு ஜோடியாகிறார் பாருங்க