ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்
கூலி படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கூலி.
அனிருத் இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெளியாகியுள்ளது.
படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் படம் வெளியாகி இருப்பதால் சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.
பாக்ஸ் ஆபிஸ்
உலகளவில் முதல் நாள் மட்டுமே படம் ரூ. 151 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது.
இந்த நிலையில் ஓவர்சீஸில் மட்டுமே படம் 2 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது.
இரண்டு நாட்களில் வெளிநாட்டில் மட்டுமே படம் ரூ. 115 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கூலி படத்தை வெளிநாட்டில் விநியோகம் செய்த Hamsini Entertainment இந்த தகவலை அறிவித்துள்ளனர்.

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
