ரஜினியின் கூலி படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த விவரம்
கூலி படம்
விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணி அமைத்து கூலி படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான், பூஜா ஹெட்ச், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
இப்பட முதல் சிங்கிள் சிக்கிடு பாடல் வெளியாகி கவனம் பெற்றது, இரண்டாவது சிங்கிளாக மோனிகா பாடல் வெளியானது. இந்தப் பாடலில் பூஜா ஹெக்டே ஆடியிருந்த சிறப்பு நடனம் ரசிகர்களை கவர்ந்தது.

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ
டிரைலர்
ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவல் வந்துள்ளது.
அதாவது வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் இசை வெளியீடு நடக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
