சூப்பர்ஹிட் சன் டிவி சீரியலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும் ரஜினிகாந்த்.. அது என்ன சீரியல் தெரியுமா
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு பிடித்த சீரியல்
அப்போது அவரிடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த்.
அவருக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றும், தனது வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.
இதனை எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது