இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த்.. அதுவும் எத்தனை நாட்கள் தெரியுமா
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலத்தீவிற்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வைரலானது. இதை தொடர்ந்து இன்று நடைபெறவிருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை திரும்பியுள்ளார்.
இமயமலைக்கு செல்லும் ரஜினி
இந்நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் இமயமலைக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த். அதன்படி, அடுத்த மாதம் 6ஆம் தேதி ரஜினி இமயமலைக்கு செல்ல உள்ளாராம்.
அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலாவில் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளாராம்.
கடந்த 2010ல் இருந்து தன்னுடைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இமயமலைக்கு செல்வதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக செல்லாமல் இருந்த ரஜினி தற்போது தான் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க