கமலின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்துடன் இதோ
கமலின் விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில்உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விக்ரம் எனும் தலைப்பில் இதற்கு முன் கடந்த 1986ஆம் ஆண்டு, முதன் முதலில் கமல் ஹாசன் நடித்து வெளிவந்துள்ளது. அப்போதைய காலகட்டத்தில் இப்படம் பெரிதும் வெற்றிபெறவில்லை.
படப்பிடிப்பில் ரஜினி
இந்நிலையில், விக்ரம் {1986 } படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசனுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விக்ரம் மற்றும் மிஸ்டர் பாரத் இரு திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்ததன் காரணமாவே கமல், ரஜினி இருவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..